
வட்டவளை – விக்ட்டன் மேற் பிரிவு தோட்டத்தில் ,நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
42 வயது உடைய, திருமணமாகி குழந்தைகள் இல்லாத குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார்.
இவ்வாறு மரணித்தவர் வீட்டு பாவனைக்கு விறகு தேடி சென்ற நிலையில் , மீண்டும் வீடுதிரும்பாத காரணதினால் ,வீட்டாரும் ,தோட்ட மக்களும் ஒன்று கூடி தேடி பார்த்த பொழுதே சடலத்தை இனங்கண்டுள்ளனர் .
இதையடுத்து அதிர்ச்சியடைந்த அடைந்த மக்கள் ,வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் அங்கு சென்று பார்வை இட்டு , இறந்த நபரின் சடலத்தை பாதுகாத்து வருகின்றனர்.
அத்துடன் , ஹட்டன் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு சென்று, பார்த்த பின்னரே சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லபட்டு, சட்ட வைத்திய அதிகாரியின் முன்னால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளபடும் என வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார் .
இச் சம்பவம் கொலையா ? அல்லது விபத்து மரணமா? என வட்டவளை பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்கின்றனர் .
பிற செய்திகள்

