
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) போக்குவரத்துச் சட்டத்திற்கு முரணான பிரதித் தலைவரை நியமித்து அரசாங்கத்திற்கு சட்டவிரோதமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னாள் அமைச்சர் எல்.ஏ.விமலரத்னவை இலங்கை போக்குவரத்து சபையின் பிரதித் தலைவராக 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் நியமித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் பிரதித் தலைவருக்கு சம்பளம் மற்றும் இதர சலுகைகளாக 3.2 மில்லியன் ரூபாவை வழங்க வழியமைத்து அரசாங்கத்திற்கு சட்டவிரோதமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.
பிற செய்திகள்

