அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!

அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது.

இந்திய இராணுவத்தில் அக்னி வீரர்களைத் தெரிவு செய்வதற்காக, அக்னி பாதை என்ற புதிய திட்டத்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற, 17அரை வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விமானப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை இன்று தொடங்கும் என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி அறிவித்தள்ளார்.

வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் IAF-இன் அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பார்வையிடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *