வெற்றி பெற்ற திருகோணமலை மாணவர்கள் உட்பட மூவர் இங்கிலாந்து பயணம்! (படங்கள் இணைப்பு)

வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 3 மாணவர்கள் தேசிய கணிதப் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்குப் பயணமாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சிதம்பரா கணிதப்போட்டியில் மூன்று மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்களான
செல்வன் யசோதரன் மிதுலாஷன், செல்வன் உதயாரன் கோஷிகன் மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மணவனான செல்வன் சுகந்தன் சாகித்தியன் ஆகியோரே வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் நாளை (25) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்குபற்றுவதற்காக விமானம் மூலம் நேற்று (23) இங்கிலாந்து சென்றுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *