இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் நாட்டை வந்தடைந்தது!

இந்தியாவில் இருந்து இரண்டாவது மனிதாபிமான உதவித் தொகை இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் இந்த உதவிகளை பெற்றுக்கொண்னர்.

3000 கோடி ரூபாய்க்கு அதிக பெறுமதியுடைய மனிதாபிமான உதவிகள் அடங்கிய கப்பல் இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

முன்னதாக கடந்த 16ஆம் திகதி இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *