திருச்சி முகாமில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உயிரை மாய்க்க முயற்சி!

தமிழகம் திருச்சி முகாமில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரை மாய்க்க முடிவு செய்துள்ளார்.

தமிழகம் திருச்சி முகாமில் ,கடந்த 35 நாட்களாக இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்களின் விடுதலை தொடர்பில் இலங்கை ,இந்திய அரசுகள் எந்தவித ஆக்கபூர்வமான முடிவுகளையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் முகாமில் உள்ள யாழ்பாணத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் தீ குளித்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

பின்னர் அவர் காப்பாற்றப்பட்டு திருச்சி அரச மருத்துவமனையில் தீ காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும்,மனைவி பிள்ளைகள் மதுரை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *