ஒருசில நாட்களே எஞ்சியுள்ளது! தனியார் பஸ் முக்கிய கோரிக்கை

எரிபொருள் கட்டண அதிகரிப்பை தற்காலிகமாக ஒத்தி வைக்குமாறு மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் போக்குவரத்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பஸ் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வருடாந்த பஸ் கட்டண மீள் திருத்தத்திற்கு இன்னும் ஒருசில நாட்களே எஞ்சியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு இடையில் எரிபொருள் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டால், பல்வேறு சிக்கல்கள் உருவாகும் நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே தனியார் பஸ் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 50 அல்லது 60 ரூபாவின் மூலம் எரிபொருள் விலைகள் இன்று அதிகரிக்கப்பட்டால், வருடாந்த பஸ் கட்டண மீள் திருத்தத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தாம் நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இரண்டு துறைசார் அமைச்சர்களும் கலந்துரையாடி இதற்கு தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *