லொறி மோதியதில் எரிபொருள்க்காக வரிசையில் நின்ற இளைஞன் பலி!

பொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் மீது டிப்பர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று அனுராதபுரம் – பந்துலகம பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற இளைஞர் மீது கனரக உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறி மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் – புத்தளம் வீதியின் இடதுபுறத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த நிலையிலேயே இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *