
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் பாம்பு தீண்டி உயிரிருக்கு போராடிய வயோதிபரை காப்பாற்றிய சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாம்பு தீண்டி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போது, பெண் செலுத்திச்சென்ற முச்சக்கரவண்டியில் எரிபொருள் இன்மையால் வீதியில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நபரை வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரது மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு கொண்டுச் சேர்ந்துள்ளார்.
இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் சரியான தருணத்தில் முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரின் உயிர் காப்பாற்றப்பட்டதாக அங்கு கடமையில் இருந்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரான என்.எம்.கசீன் என்பவரே இந்த மனிதாபிமான உதவியை செய்துள்ளார்.
அவரின் நற்செயலினை கண்டு நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதேச வாசிகள் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்

