பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியர், மாணவர் ஒருவருக்கும் விளக்கமறியலில்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் சிலரைத் தேடி பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில் குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து மாணவிகள் பலரின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

இவ்வாறு ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் சிலரும் செய்த சேட்டையை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்து ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்துப் பார்வையிட்டபோது பல மாணவிகளின் நிர்வாணமாக எடுத்துக்கொண்ட வீடியோக்கள், மாணவிகளின் நிர்வாணமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மாணவிகளுடன் உடலுறவு கொண்ட வீடியோக்கள் அதில் இருப்பதை அவதானித்து அதனைச் சோதித்தபோது குறித்த ஆசிரியரும் மாணவர்களும் இந்தச் செயற்பாடுகளில் தொடர்புகொண்டிருந்தமை அறியக்கூடியதாக இருந்தது.

குறித்த ஆசிரியர் மாணவர்களைப் பயன்படுத்தி மாணவர்களை மாணவிகளோடு காதல் வலையில் விழுத்தி அவர்கள் ஊடாக அந்த மாணவிகளுடைய நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்று ஆசிரியரும் அந்த மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரை விசாரணைக்கு அழைத்த பொலிஸார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது ஒரு மாணவியை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் குறித்து ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலைமையில் குறித்த ஆசிரியரோடு சேர்ந்து இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாணவர்களைப் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

17, 18 வயதுகளையுடைய இந்த ஆறு மாணவர்களையும் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது மாணவர் ஒருவர் எதிர்வரும் 30ஆம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறான பின்னணியில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் இன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *