யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடுகளை தீர்க்கும் பொறிமுறை தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை கப்பல் மூலம் எடுத்துவரப்பட்ட இந்திய – தமிழக உதவிப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டபின்னர் அமைச்சருடன் இவ்விடயம் தொடர்பில் பேசியிருந்ததுடன் வெளிநாடுகளினதும் புலம்பெயர் நன்கொடையாளர்களினதும் உதவியை நாடுவதனூடாக தேவையான மருந்துப்பொருட்களையும் இதர உதவிகளையும் விரைவாக நாட்டுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பாக இதன்போது சுகாதார அமைச்சருக்கு எடுத்துரைத்ததாக அங்கஜன் எம்.பி மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்

