எரிபொருளை வழங்குமாறு தெரிவித்து புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் எரிபொருளப் பெற்றுத் தருமாறு கோரி புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக புத்தளம் குருனாகல் பிரதான வீதியை மறித்து இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

வெள்ளிக்கிழமையன்று தமக்கு விஷேட முறையில் புத்தளம் சிறாம்பியடி எரிபொருள் நிலையத்தில் காலை 7 மணிமுதல் எரிபொருளைத் தருவதாக புத்தளம் மாவட்ட சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்த நிலையில் 10 மணியாகியும் தமக்கான எரிபொருள் வழங்கப்படவில்லையென தெரிவித்து புத்தளம் குருனாகல் பிரதான வீதியை மறித்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு புத்தளம் பொலிஸார் வருகைத் தந்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கலந்துரையாடி எரிபொருளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் குறித்த வீதியினூடாக செல்லும் வாகங்களை வேறு வீதியினால் செல்லுமாறு கோரி போக்குவரத்து பொலிஸாரினால் வாகனங்களை திருப்பியனுப்பியதைக் காணக்கூடியதாக இருந்தது.



பிற செய்திகள்
- இலங்கையுடனான பொருளாதார ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும்! – பங்களாதேஷ்
- நீதி அமைச்சர் விஜயதாச யாழிற்கு விஜயம்! (படங்கள் இணைப்பு)
- வெளிநாடுகளிலும் வேலை செய்ய அரச ஊழியர்களுக்கு சந்தர்ப்பம்! – வெளியான புதிய அறிவிப்பு
- வடமராட்சி பேருந்து சேவை சங்கத்திரின் போராட்டம் நிறைவு!
- 45 இலட்சம் பேர் தொழிலை இழக்கும் அபாயம்! ஏற்றுமதி அபிவிருத்தி சபை எச்சரிக்கை
- நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் கடும் மன அழுத்தத்தில் மக்கள்! வைத்திய நிபுணர் எச்சரிக்கை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

