ஹெரோய்னுடன் குடும்பஸ்தர் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகசபை வீதியில் ஹெரோய்னை உடைமையில்  வைத்திருந்த குற்றச்சாட்டில் 39 வயதான குடும்பஸ்தர் ஒருவர்  கைது செய்யப்பட்டார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் ஹெரோய்னை உடைமையில் வைத்திருப்பதாக மானிப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் அவரிடமிருந்து 50 மில்லிகிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டது. அதனையடுத்து குடும்பஸ்தருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *