
இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெறுவதற்காக ஓட்டோவுடன் வந்தவர் விபத்தில் சிக்கி காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓட்டோக்கு எரிபொருளைப் பெறுவதற்காக வடமராட்சி ஆழியவளைப் பகுதியிலிருந்து இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்து ஓட்டோவை வரிசையில் நிறுத்த முற்பட்டவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்த ஓட்டோ சாரதி பளை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர் வடமராட்சி ஆழியவளைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என்று தெரிவித்த பளை பொலிஸார் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

