ரூ.3 பில்லியன் பெறுமதியான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்

கொழும்பு, ஜூன் 23

இந்திய மக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித்தொகையுடன் கூடிய கப்பல் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளது.

அவற்றில் 14,712 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் மா மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மனிதாபிமான உதவியின் மொத்த பெறுமதி 3 பில்லியன் இலங்கை ரூபா என தெரிவிக்கப்படுகிறது..

இந்திய மக்களால் வழங்கப்பட்ட முதல் மனிதாபிமான உதவித்தொகை கடந்த மாதம் 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததுடன் அதில் 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *