அமைச்சுக் கதிரையில் தம்மிக்க!

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக, இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அவ்வெற்றிடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் மூலம் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 22 ஆம் திகதி அவர் சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *