இன்று இலங்கை வரவிருந்த எரிபொருள் கப்பல் மீண்டும் தாமதமடைந்துள்ளதாக அதனுடன் தொடர்புடைய நிறுவனம் கனியவள கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
40,000 மெற்றிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்தது.
எனினும், குறித்த எரிபொருள் கப்பல் வருவதற்கு மீண்டும் தாமதமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கப்பல் இலங்கை வரும் நாள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்