இவ் அரசாங்கம் சிலரிற்கு சலுகைகளை வழங்கியுள்ளது. அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவதும் தவறான முறையில் பயன்படுத்துவதும் அவர்களின் பொறுப்பு என சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எண்ணெய் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர், அங்கு வரிசையில் நிற்பவர்களை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
இக் காணொளியை பார்த்த பொலிஸார், நீ ஊடகவியலாளரா? என்று கூறி அந் நபரை மிரட்டினர், பின் அக் காணொளியை அந் நபர் அகற்றியுள்ளார், தாம் சாதாரணமாக தம் நண்பர்களிற்கு பகிர்ந்துள்ளதை குற்றம் என பொலிஸார் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அசாதாரண நிலமை ஏற்படும் சந்தர்ப்பத்தில், அவற்றை பகிர ஊடகவியலாளராகவே இருக்க வேண்டுமா?
அப் பொலிஸாருக்கு என்ன அதிகாரம் உள்ளது
மே 9ம் திகதி ஏற்பட்ட கலவரத்தின் போது, மக்கள் மீது தாக்குதல் நடத்த பொருட்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது. தேசபந்து தென்னகோன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அந்த நேரத்தில் அவரின் கடைமை மக்களை காப்பாற்றுவது. ஆனால் அங்கு நடந்த சம்பவத்திற்கு அவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொலிஸார் பிரச்சனை பெரிதுபடுத்த கூடாது. எந்த ஒரு போராட்டத்தின் வடிவத்தையும் மாற்ற பொலிஸாரால் முடியும். எனவே சரியான முறையில் கையாள்வது மிகவும் அவசியம். – எனத் தெரிவித்தார்.
பிற செய்திகள்