எரிபொருள் தட்டுப்பாடு இப்போதுதான் ஆரம்பம்! தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை

எரிபொருள் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது. எரிபொருள் வரிசையால் 11வது மரணம் பதிவாகியுள்ளது என பெற்றோலியம் மற்றும் துறைமுக நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.

இச் சம்பவத்திற்கு அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். அரசாங்கம் இத் துயர் சம்பங்கள் குறித்து எந்த கருத்தும் வெளிப்படுத்தாமல் இருக்கின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு தற்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டீசல் கப்பல் வராது, எரிபொருள் கப்பல் வராது என்று அமைச்சர் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளார்.

அதேபோல 92 டீசல் சேமிப்பில் இல்லை, 10000 டீசல் இரண்டு நாட்களில் முடிந்துள்ளது. அதே போல விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சென்றால் நாட்டில் எரிபொருள் நிலை கேள்விக்குறியாகி விடும். – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *