40 ஆயிரம் தொன் எரிபொருளுடன் இன்று வர இருந்த கப்பல் மேலும் தாமதமாகும் – அமைச்சர் கஞ்சன

40 ஆயிரம் தொன் எரிபொருளுடன் இன்று வர இருந்த கப்பல் மேலும் தாமதமாகும் – அமைச்சர் கஞ்சன

இன்று இலங்கை்கு வரவிருந்த எரிபொருளை தாங்கிய கப்பலின் வருகை மேலும் தாமதமாகும் என எரிபொருள் வழங்குநர் அறிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் அமைச்சர் அறிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை இட்டு அமைச்சர் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

40,000 மெட்ரிக் தொன் எரிபொருளை தாங்கிய கப்பல் நேற்றைய தினம் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், குறித்த கப்பல் வருவதற்கு இன்றுவரை தாமதாகும் என அமைச்சர் நேற்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த கப்பல் நாட்டை வந்தடைய மேலும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று கப்பல் வருகை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட தாமதத்திற்கு எரிசக்தி அமைச்சர் மன்னிப்பு கோரினார்.

இதேவேளை, சுகாதார சேவைக்கு எரிபொருள் வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *