பாடசாலைகள் தொடர்பில் இன்று தீர்மானம்

எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதான நகரங்களிலும் பாடசாலைகளை மூடுவதற்கு கடந்த வாரம் தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய நகரங்கள் அல்லாத பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுப்பதற்கு அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *