
வெல்லவாய,ஜுன் 25
வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நால்வரே வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

