வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்
வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கொள்வனவுக்காக வரிசையில் காத்திருந்தவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதையடுத்து,இவ்வாறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்துள்ள நால்வர் சிகிச்சைகளுக்காக மொனறாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் தாக்குதல் மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
பிற செய்திகள்