கோட்டா ரணிலின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை-எம்.எம் மஹ்தி கவலை!

ஜனாதிபதி கோட்டா, பிரதமர் ரணில் இருவரினதும் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.

இன்று (25 ) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஊழல் மோசடி, மோசமான பொருளாதார கொள்கை, எரிபொருள் தட்டுப்பாடு, வரிசைகள், விலையேற்றம் என்பவற்றால் இந்நாட்டையும் நாட்டு மக்களையும் சீரழித்து அதல பாதாளத்திற்கு தள்ளிய கோட்டாவையும் ரணிலிலையும் ஊடகங்களில் கூட காணும் போது மிகவும் அருவெறுப்பாக இருக்கின்றது.

எனவே இவ்வாறான கொடிய பாவிகளின் உருவங்களையோ முகத்தையோ ஊடகங்களில் பிரசுரிப்பதை புறக்கணிக்குமாறு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *