சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு லிட்ரோ நிறுவனம் மீண்டும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 06 ஆம் திகதி வரை சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதம் 05 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் 7 ஆயிரம் மெட்றிக் டொன் எரிவாயு அடங்கிய இரு கப்பல்கள் நாட்டினை வந்தடையவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை மக்களுக்கு எரிவாயுவினை பெற்றுக்கொடுக்க குறைந்தளவேனும் கையிருப்பு இல்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்