மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியை மல்லிவேப்பு பகுதியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக இன்று வரிசைகளில் காத்திருந்த சுமார் 2000 பேர் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
ஹட்டன் பிரதேசத்திற்கு கடந்த 9ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் கையிருப்பு கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிற செய்திகள்

