யாழில் இரு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசிய சேவை நிலையங்களாக பிரகடனம்!

கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையம், யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியன அத்தியாவசிய தேவைக்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே கோப்பாய் , யாழ்ப்பாணம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகயாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் நீர்வேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு உரித்தான கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையம், மற்றும் யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியன அத்தியாவசிய தேவைக்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 20 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய தேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *