நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
போட்டியில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக ஜொனி பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்காது 130 ஓட்டங்களுடனும் ஜேமி ஓவர்டன் 89 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதற்கு முன்னர் தனது முதல் இன்னிங்ஸிற்காக விளையாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 329 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தற்போது 65 ஓட்டங்கள் பின்னிலையோடு இன்னும் 4 விக்கெட்கள் கைவசம் இருக்க இங்கிலாந்து அணி, 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.