
ஹட்டன்,ஜுன் 25
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள மல்லிகைப்பூ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று இரவு முதல் மண்ணெண்ணெய்யினை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்த நிலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்ட நிலையிலே குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த பகுதி மக்கள் தமக்கான மண்ணெண்ணெய்யினை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

