கொழும்பு,ஜுன் 25
இலங்கையில் தற்போது, சுமார் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 2 அல்லது 3 மாத காலப்பகுதியில் மேலும் 163 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 47.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளை கோரியுள்ளது.