கொழும்பு,ஜுன் 25
15 வயதுக்கு உட்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் ‘டிஜிட்டல் ஐடி’ அடையாள அட்டையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
பொதுவான தகவல்களுடன் ஒரு நபரின் கைரேகை, இரத்த வகை உள்ளிட்ட உயிரியல் தகவல்களை உள்ளடக்கியதாக இந்த டிஜிட்டல் அடையாள அட்டை வடிவமைக்கப்படும்.
இலங்கையிலுள்ள 17 மில்லியன் மக்களுக்கு இந்த புதிய அடையாள அட்டையை ஒன்றரை ஆண்டுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.