கொழும்பு,ஜுன் 25
நாட்டிலுள்ள சுகாதார துறையினருக்கு எரிபொருள் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கையை 84 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்காக இதுவரை 74 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தலா 6,600 லீற்றர் டீசல் மற்றும் பெற்றோலை விநியோகிக்குமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.