டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் யாழில் கைது!

யாழ்.மானிப்பாயில் பதுக்கிவைக்கப்படிருந்த 630 லீட்டர் டீசல் நேற்றிரவு  மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுள்ள வீடொன்றில் அனுமதியின்றி 630 லீட்டர் டீசல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் குறித்த வீட்டில் தேடுதல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது விசேட அதிரடிப்படையினரால் 3 கொள்கலன்களில் வீட்டில் சேமித்துவைக்கப்பட்டிருந்த டீசல் மீட்கப்பட்டுள்ளது.

அதனை களஞ்சியப்படுத்திய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *