கொழும்பு,ஜுன் 25
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரிசி, சீனி, பருப்பு, பால்மா உட்பட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்குகள் மூலம் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.