தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனின் ஊடக சந்திப்பு இன்று யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐங்கரநேசன்,
இன்றைய பொருளாதார சீர் குலைவிற்கு , பேரினவாதம் கோலோச்சியதன் காரணத்தினால் தான் என்று வெளிப்படையாக தெரிந்த போதிலும் கூட அரசாங்கம் சரி ,அதன் கீழ் உள்ள திணைக்களங்கள் சரி ,அல்லது சபைகள் சரி ,இந்த இனவாத சிந்தையில் இருந்து விடுபட்டதாக தெரியவில்லை .
இதற்க்கு எடுத்து காட்டாக ,பனை அபிவிருத்தி சபையின் தலைவர் வடமராட்சியில் இயங்கக்கூடிய திக்கம் வடிசாலையை தென் இலங்கையை சேர்ந்த , வி .எ .டிஸ்டர் அலுவலகம் ஒன்றிற்கு ,25 வருட குத்தகைக்கு வழங்கி இருக்கின்றார் .
திக்கம் வடிசாலையை தங்களிடம் முற்று முழுதாக உரிமை தர பட வேண்டும் என்று சொல்லி வடமராட்சி பனை தொழிலாளர்கள் ,நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவதோடு , பல போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றனர் .
அனால் அதை நிர்வகித்து கொண்டிருக்க கூடிய , வடமராட்சியை சேர்ந்த அந்த பனை தொழிலாளர்களின் உடைய கோரிக்கைகளை உதாசீனம் செய்து , அவர்களை புறம் தள்ளி , அவர்களுக்கே தெரியாமல் ,மிகவும் இரகசியமாக , பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்தி ராஜ , தென்னிலங்கையை சேர்ந்த ஒருவருக்கு வழங்கி இருக்கின்றார் .
மேலும் இவ் விடயமானது பேரினவாதத்தின் எதச்அதிகாரமாகத்தான் பார்க்கின்றோம் திக்கம் 1983ம் ஆண்டு உருவாக்கப்பட்டது . அப்பொழுது பாராளுமன்ர உறுப்பினர்களாக இருந்த உடுப்பிட்டியைச்சேர்ந்த ராசுலிங்கம்
பருத்தித்துறை பகுதியை சேர்ந்த துரைரட்ணம் அவர்களினதும் ,நிதி ஒதிக்கீட்டின் பேரிலும் பனை ,தென்னை வள உழைப்பாளர்களின் பேரிலும் இத் திட்டம் உருவாக்கப்பட்டது .
பனை அபிவிருத்தி சபையில் தலைவர்களாக இருந்தவர்களில் ஒரு சிலரே பனை பற்றிய அறிவை கொண்டிருக்கின்றனர் . மற்றயவர்கள் அரசியல் சிபருசுகளை ஒருங்கிணைப்பதிலேயே கருத்தாய் இருந்தார்கள் .
இவர்கள் முன் அறிவித்தல் இல்லாது தென் இலங்கைக்கு விற்றது மட்டுமல்லாது கொத்தடிமையாகவும் நடத்துகின்றனர் . மேலும் சட்டத்திற்கு புறம்பாகவே இவர்கள் நடந்து கொள்கின்றனர் . அது மட்டுமன்றி முரண்டு , வெருட்டுகின்றனர் . உண்மையில் இது கண்டிக்கப்பட வேண்டியது .
தமிழ் மக்களில் வளங்களில் முதன்மையானது பனை வளம் . அது இப்பொழுது சீரழிந்து ,வளங்கள் பறிக்கபடுகின்றது என்றார்.
பிற செய்திகள்