52 ஆவது படை பிரிவு ஏற்பாட்டில் போஷாக்கு உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம்,ஜுன் 25

பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்போது கருவுற்றிருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் ஆவரங்கால் பகுதியில் இடம் பெற்றது. 

52 ஆவது படை பிரிவு ஏற்பாட்டில் இந்த போஷாக்கு உணவு போதிகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. 52 ஆவது படைப்பிரிவின் கீழ் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கர்பிணி பெண்களுக்கு இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு போசாக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான நன்கொடையினை கனடாவில் வாழும் வர்த்தகரான ராஜிகரன் சண்முகரத்தினம் அவர் வழங்கியிருந்தார். காலை 9 மணியளவில் இந்த இடம்பெற்ற இந்த நிகழ்வில். பிரதம விருந்தினர்கள் தமிழர் பாரம்பரிய முறைப்படி அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு அரம்பம் ஆனது.

இதன்போது சின்ன சிறுவர்களின் இசை நிகழ்ச்சியும் நிகழ்வினை அலங்கரித்தது. இதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 50 கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை 52 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெனாண்டோ , 521 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மகேன் அல்லத்துவ அவர்களும் இணைந்து கொண்டிருந்தார்.  அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஸ்ரீ அவர்களும் கலந்துகொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். நிகழ்வில் இராணுவத்தின் கனிஸ்ட மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *