அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவு நீக்கப்பட்டு கருக்கலைப்பு உரிமைக்கு அந்தநாட்டு
உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ‘‘கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அது அரசமைப்பு உரிமை’’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதேபோல் 1992ஆம் ஆண்டில் ‘‘22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாகக் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்’’ என்று
தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளின் சட்டம் மாற்றப்பட்டு கருக்கலைப்பு உரிமைக்கு அந்தநாட்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இந்தத் தீர்ப்புக்கமைய அமெரிக்காவின் 13 மாகாணங்களின் கருக் கலைப்பு தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவிலுள்ள ஏனைய மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளைக் கடுமையாக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தல்
போன்றவற்றை நிறைவேற்றவுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கருக்கலைப்பு உரிமையை ரத்துச் செய்தமையை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.

