மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள்!

நாட்டின் எதிர்கால சந்ததியினராகிய குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சில மாவட்டங்களில் பாடசாலைகள் நடைபெற்றாலும் அவை வெற்றி அளிக்கவில்லை.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. நாங்கள் பாடசாலைகளை மூடச் சொல்லவில்லை ஆசிரியர்கள் மற்றம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதாற்காக ஒரு போக்குவரத்து கட்டமைப்பினை உருவாக்குமாறே கோருகின்றோம்.

இத்தனை நாட்கள் பாடசாலைகளை தயார்படுத்தஅரசு முயற்சிப்பதாகக் கூறுவது
மாணவர்களை ஏமாற்றும் செயலாகும்பாடசாலைக்கு செல்வதற்கான அமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டுமென கல்வி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறோம்
கடந்த வாரம் ஆன்லைன் கற்பதித்தல் நடவடிக்கையும் தோல்வியடைந்தது.

தற்போது மூன்று நாட்கள் பாடசாலைகளை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் வராத ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட வேண்டும்
குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள்.எரிபொருள் வரிசைகளில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை இல்லை. வாரத்தில் பல நாட்கள்பாடசாலைகளை நடத்தினாலும் நடத்தினால், அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவான சூழலை கண்டறியுங்கள் என தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *