யாழில் 2,500க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி?

யாழ் மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளின் பாண் உற்பத்திக்கும், விநியோகத்திற்கும் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற வழி வகுக்கப்படா விட்டால் வரும் வாரத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்படும் என யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், அங்கு பணி புரியும் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பணியாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் .

நடமாடும் பாண் விநியோக நடவடிககைகளில் ஈடுபடும் 500 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுவதுடன் அதனூடாக வாழ்வாதாரத்தினை நம்பி இருக்கும் குடும்பங்கள் பாதிக்கப்படும்.

ஏற்கனவே பாண் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினாலும் விலையேற்றத்தினாலும் பாதிக்கப்பட்ட பேக்கரிகளின் உரிமையாளர்கள் எரிபொருள் கிடைக்கப்பெறாத நிலையில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாண் உற்பத்திக்கு தேவையான டீசல் ஓரளவு கிடைக்கின்ற போதும் நடமாடும் விநியோகத்திற்கு தேவையான பெட்ரோல் கிடைக்காமையால் பெரும் சிரமத்தை எதிர் நோக்கிக்குகின்றனர்.

அத்தியாவசிய தேவையாக கருதி எமக்கு பெற்றோல் கிடைக்க ஆவண செய்யுமாறு சம்மந்தப்படடவர்களை கேட்டுக்கொள்கின்றோம் -என்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *