
சுமார் ஒரு கோடியே 10 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
டுபாயிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த பெண்ணிடம் இருந்து 650 கிராம் நிறையுடைய தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்

