கதிர்காம யாத்திரியர்களுக்கு குளிர்பானங்களை வழங்கிய முஸ்லீம் இளைஞர்கள்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை செல்வச் சன்னதி ஆலயத்திலிருந்து இம்மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமான கதிர்காமத்திற்கான பாதயாத்திரை 25 ஆம் திகதியான இன்று 21 வது நாள் ,திருகோணமலை, தோப்பூர் – பட்டித்திடல் சிறி சித்திவிநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.

இதன்போது பாதயாத்திரையாக வருகை தந்த கதிர்காம யாத்திரியர்களுக்கு தோப்பூர் பிரதேச முஸ்லீம் இளைஞர்கள் குளிர்பானங்களை வழங்கி யாத்திரியர்கள்களை வரவேற்றனர்.

பின்னர் மாலை 4.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட கதிர்காம யாத்திரையானது மூதூர் – பாரதிபுரம் லிங்க நாகேஸ்வரர் ஆலயத்தில் இன்று இரவு தரித்து நிற்கவுள்ளது.

இவ் கதிர்காம பாதை யாத்திரையில் 120 அடியார்கள் பயணம் செய்கின்றனர்.

இவ் கதிர்காம யாத்திரையானது 18 ஆம் திகதி உகந்தையை சென்றடைந்து 19 அல்லது 20 ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையவுள்ளது.

கதிர்காம கொடியேற்றமானது இம்மாதம் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *