30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வவுனியாவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வவுனியாவில் கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்படும் நிலையங்களுக்கு சென்று 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும். அதன்படி இன்று (29.07) வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட விபுலானந்தா கல்லூரியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் சினோபாம் தடுப்பூசியின் போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் விபுலானந்தா கல்லூரியில் சென்று சீனாவின் சினோபாம் தடுப்பூசியைப் பெற முடியும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *