திருகோணமலையில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை ஒல்லாந்தர் குடா Dutch Bay கடற்கரையில் கரைவலை மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று (28) மாலை 6.30 மணியளவில் நடத்தினார்கள்.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மீனவர் சங்கம் என்பனவற்றின் ஆதரவுடன் இது மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுலா அபிவிருத்தி என்ற போர்வையில் உல்லாச விடுதி உரிமையாளர்கள் சட்ட ரீதியற்ற முறையில் கடற்கரையை ஆக்கிரமித்து நிர்மானப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால் தமது மீன்பிடி உபகரணங்களை பராபரிப்பதிலும் கரைவலை இழுப்பதில் இடப்பற்றாக்குறையை நாம் எதிர்கொள்கிறோம்.

இதுபற்றி அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.பெருந்தொற்று வேளையிலும் நிர்மானங்கள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் அரசானது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதால் தாம் வாழ்வாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

26 கரைவலை உரிமையாளர்கள் இக்கடற்கரையில் 75 வருடங்களுக்கு மேலாக இங்கு நரிமலைப்பாட்டில் கடற்தொழில் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *