இலங்கைக்கு வருகைத்தரக் கூடிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு சிவில் விமான சேவை அதிகாரசபையினால் நீக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தடுப்பூசியின் இரண்டு செலுத்துகைகளையும் பெற்று 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும்.
அதனை உறுதிப்படுத்தக்கூடிய சான்றிதழ் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், தடுப்பூசியின் ஒரு செலுத்துகையை மட்டும் பெற்றுக் கொண்ட அல்லது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பயணிகளை அழைத்து வரும் விமானத்தில் 75 பேர் மாத்திரமே இருக்க வேண்டும்.
அவர்கள் இலங்கைக்கு வருகை தந்த பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.