தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றினால் இன்று (29) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் -அச்சுவேலியைச் சேர்ந்த இராசா ரமேஸ்குமார் (வயது-45) என்பவரே உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் உடல் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக மின்தகனம் செய்யப்படவுள்ளது.