ஆபத்தான நிலையில் இளைஞனுக்கு மருத்துவம் பார்க்காது மக்களை தரக்குறைவாக பேசிய வைத்தியர்!

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இளைஞனுக்கு மருத்துவம் பார்க்காது மக்களை தரக்குறைவாக பேசிய வைத்தியர் ஒருவருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று பிரதேச மக்களால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம், உடபுஸ்லாவ – இராகலை பிரதான வீதியின், டெல்மார் மத்திய சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இராகலை டெல்மார் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்றிரவு மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில், பிரதேச மக்களால் மீட்கப்பட்ட குறித்த இளைஞன், உடபுஸ்ஸலாவ ஆதார வைத்தியசாலைக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

Advertisement

ஆனால் அங்கு 2 மணிநேரமாகியும் வைத்தியர் வருகைத் தராதன் காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இளைஞனை கொண்டுச் சென்றுபோது, நான்கு மணிநேரத்தின் பின்னரே இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அத்துடன் அங்கு வருகைதந்த வைத்தியர் ஒருவர், ‘நான் எஸ்டேட் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை என தரகுறைவாக அங்கிருந்தவர்களை பேசிய நிலையில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தம்மை தரம்குறைவாக பேசிய வைத்தியருக்கு எதிராக டெல்மார் தோட்ட மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குறித்த வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *