வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களில் 20 சதவீதமானோருக்கு மந்தபோசனை

கொழும்பு,ஜுன் 26

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களில் 20 சதவீதமானோர் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையில் போசாக்கு தொடர்பான தெளிவின்மை அல்லது பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக சிறுவர்களிடையே மந்தபோசனை மட்டம் அதிகரிப்பதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் சிறுவர்களின் போசாக்கு மட்டம் தொடர்பாக மதீப்பீடு செய்யப்படுகிறது. சிறுவர்களின் வயதுக்கு ஏற்ற நிறை, வயதுக்கு ஏற்ற உயரம் மற்றும் உயரத்திற்கு ஏற்ற நிறை என்பன தொடர்பில் இவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் எதிர்வரும் 2 மாதங்களுக்கு இந்த மதிப்பீட்டு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

430 நோயாளர்கள் அடையாளம் காணப்படும் வரையில் இந்த நடவடிக்கை முன்கொண்டு செல்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களில் 15 முதல் 20 சதவீதமானோர் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அனைத்து வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்படுபவர்களிகள் மந்தபோசனை சில சந்தர்ப்பங்களில் அதிகரிக்கக்கூடும்.

இதன் காரணமாகவே சிறுவர்கள் அடிக்கடி நோய் நிலைமையால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், சிறுவர்களின் கல்வி மட்டம் மற்றும் அறிவு மட்டம் என்பன பாதிக்கப்டலாம்.
இந்த விடயம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *