அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கையை வந்தடைந்தது

அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இன்றைய அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

அமெரிக்காவிற்கு சொந்தமான விசேட விமானமொன்றில் இந்தப் பிரதிநிதிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்துள்ளனர்.

இலங்கையில் தற்பொழுது எதிர்நோக்கப்பட்டு வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்து கலந்தாலோசனை செய்யும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் குழு இலங்கை வந்தடைந்துள்ளது.

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் ராஜாங்கத் திணைக்களத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இந்த பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 29ம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்காவின் துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் கெப்ரோன், தென், மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான பிரதி துணை ராஜாங்கச் செயலாளர் கெலி கிடர்லின் ஆகியோர் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு காத்திரமான முறையில் உதவிகளை வழங்குவது குறித்து ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *