
ஜேர்மனிக்கு நேற்றைய தினம் புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று தொடங்கும் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
மாநாட்டில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், எரிசக்த , உணவுப் பாதுகாப்பு, சர்வதேச அளவிலான உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங் கள் குறித்து ஆலோசிக்கப்படும் என வெளி யுறவுத்துறை தெரிவித்துள்ளது .
அமெரிக்க அதிபர் ஜோன் பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.
தொடர்ந்து 28 ஆம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.

