5 விக்கெட்களை இழந்து தடுமாறும் நியூசிலாந்து அணி : நான்காம் நாள் ஆட்டம் இன்று !

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவ்வணி சார்பாக டொம் லாதம் 76 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்ட நிலையில் நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்து அணியை விட 137 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

முன்னதாக முதல் இன்னிங்ஸிற்காக விளையாடிய இங்கிலாந்து அணி 360 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி 329 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *